வெங்காயம் விலை உயர்வு
சேலம்: சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, ஓமலுார் அதன் சுற்று-வட்டார பகுதிகள், நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, ராசிபுரம், மெட்டலா மட்டு-மின்றி, பெரம்பலுார், துறையூர் பகுதிகளில் சின்னவெங்காயம் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆனால் நாமக்கல் மாவட்டத்துக்கு தென்மாவட்டம், பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடி-யாக வாங்கி செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் மார்க்கெட்-டுக்கு கடந்த வாரத்தில் இருந்து, தற்போது, 70 சதவீதம் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது.சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த, 30ல் சின்ன வெங்காயம் கிலோ, 45 முதல், 55 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 60 முதல், 65 ரூபாய்க்கு விற்றது. நேற்று, உழவர் சந்தையில் சின்ன வெங்காயம், 70 முதல், 75 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனையானது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக், புனே மற்றும் ஆந்திரா, கர்நா-டகா மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகம் சாகுபடி செய்-யப்படுகிறது. அங்கிருந்தும் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்-துள்ளது. அதன்படி கடந்த, 30ல் உழவர் சந்தையில் பெரிய வெங்-காயம் கிலோ, 45 முதல், 50 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கு விற்றது. நேற்று பெரிய வெங்காயம் விலை உயர்ந்து, உழவர் சந்தைகளில், 50 முதல், 60 ரூபாய், வெளி மார்க்-கெட்டில், 70 ரூபாய்க்கு விற்பனையானது. இத்தகவலை, அதன் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.