மின்சார சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகாசி: சிவகாசியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கன வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செயற்பொறியாளர்பத்மா தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் துவங்கி பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற மின்வாரிய ஊழியர்கள் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.
மக்களுக்கு மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement