பள்ளூர் - சோகண்டி சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., சாலை உள்ளது.

இந்த சாலை, 7 மீட்டரிலிருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இரு வழிச்சாலைக்கு ஏற்ப, 44 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவுபடுத்தப்பட்டு, வாகன பயன்பாட்டில் உள்ளது.

ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் கொட்டவாக்கம், மூலப்பட்டு, பரந்துார், தண்டலம் ஆகிய பகுதிகளில், சாலை ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும், இந்த சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, சேதமடைந்த பள்ளூர் - சோகண்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement