ஓடும் காரில் தீ; 4 பேர் உயிர் தப்பினர்

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்-பட்டது.


ஈரோடு, ராசாம்பாளையம், தென்றல் நகரை சேர்ந்தவர் சதீஷ்-குமார், 30; டாடா இண்டிகா காரில், மனைவி, இரு குழந்தைக-ளுடன் வெப்படையை நோக்கி நேற்று காலை சென்றார். ஈரோடு வ.உ.சி., பூங்கா அருகில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த மக்கள் சத்தமிடவே, சதீஷ்குமார் உடனடியாக காரை நிறுத்தினார். அதே வேளையில் மனைவி, குழந்தைகளையும் இறக்கி விட்டார். அவர்கள் இறங்கிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீப்பி-டித்து எரிய தொடங்கியது. அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இரு போலீசார், பெட்ரோல் பங்க்கில் இருந்த தீயணைப்பான்-களை எடுத்து, நுரை கலவையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்ப-டுத்தினர். அதற்குள் ஈரோடு தீயணைப்பு துறையினரும் வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும், காரின் முன்புற பகுதி முழுவதும் எரிந்து விட்டது.

Advertisement