சேதமடைந்த மலட்டாறு பாலம் நெடுஞ்சாலைத் துறை அலட்சியம்
சாயல்குடி: கடலாடி அருகே மலட்டாறு பாலத்தில் ரோடு சேதமடைந்த நிலையில் சீரமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 67 கி.மீ.,ல் சாயல்குடி உள்ளது. மலட்டாறு பகுதியில் இருந்து சாயல்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 150 மீ., சேதமடைந்த நிலையில் மலட்டாறு பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை ராமநாதபுரம், திருச்செந்துார், கன்னியாகுமரி, துாத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.
பொதுமக்கள் கூறுகையில், மலட்டாறு பாலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. டூவீலரில் செல்வோருக்கு எதிரே வரும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement