நீலப்பறவைகள் இயக்க தொடக்க விழா
ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குருளையர், நீலப் பறவைகள் இயக்கத் தொடக்க விழா, உணவு திருவிழா, மரம் நடும் விழா நடந்தது.
மாவட்ட சாரணியர் இயக்க முதன்மை ஆணையரான முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராஜு தலைமை வகித்தார். தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் டாரத்தி கரோலின் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயா, உஷாராணி சாரண இயக்கத்தின் சிறப்பு குறித்து பேசினர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement