மாநில கலைத்திருவிழா போட்டி 375 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை: மாநில கலைத்திருவிழா போட்டியில் மாவட்டத்திலிருந்து பங்கேற்க செல்லும் 375 மாணவர்களின் வாகனத்தை கலெக்டர் ஆஷா அஜித் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கலைத் திருவிழா போட்டிகள் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கின்றனர்.

1 முதல் 5 வரை கோயம்புத்துாரில் ஜன.4 நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 52 மாணவர்களும், 6 முதல் 8 வரை திருப்பூரில் ஜன.4 நடக்கிற போட்டியில் 48 மாணவர்களும், 9,10 ஈரோட்டில் ஜன.3,4ல் 142 மாணவர்களும், பிளஸ் 1,2 நாமக்கலில் ஜன.3,4ல் 133 மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

நேற்று 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 144 மாணவர்கள் மாநில கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு, நமக்கல் மாவட்டங்களுக்கு 4 பஸ்களில் சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மாரிமுத்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு கலந்து கொண்டனர்.

Advertisement