அதிகாரிகளே 'ராஜா'; பணிகள் நடக்குமா பேஷா!

நேற்று வரை இருந்த பதவி, இன்று முதல் காணாமல் போனது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில், பதவிக்காலம் முடிந்த தால், மக்கள் பிரதி நிதிகள் நடையைக் கட்ட, அதிகாரிகளின் 'ராஜ்ஜியம்' இனி கோலோச்சப் போகிறது. தேவையான அத்தி யாவசியப் பணிகளை உடனடியாக நிறைவேற்று வது சாத்தியமாகுமா என்ற ஏக்கம், மக்களிடம் பிறந்துள்ளது.

அதிகாரிகள் பிடியில் இன்னும் 2 ஆண்டு?



திருப்பூர் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள்; 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 170 ஒன்றிய வார்டுகள்; 265 கிராம ஊராட்சிகள் மற்றும், 2,295 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 2019 டிச., 27 மற்றும் 30 என, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

ஏறத்தாழ 10 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலுக்கு முன்னதாகவே, 12 ஊராட்சி தலைவர்கள்; 490 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களது பதவிக்காலம், இன்று மதியத்துடன் நிறைவு பெறுகிறது. மாவட்ட குழு, ஒன்றிய குழுவினர், அதிகாரிகள் வசம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.

நிர்வாக அதிகாரம் பொருந்திய ஊராட்சி தலைவர்கள், இன்று காலை, அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில், மண்டல துணை பி.டி.ஓ.,க்களிடம், பொறுப்புகளை ஒப்படைக்கின்றனர். இன்று முதல், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,கள், ஊராட்சிகளுக்கான தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி அளவிலான செலவினங்களுக்கு, தனி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் செக்கிங் கையொப்பமிடவழிவகை செய்யப்பட இருக்கிறது.

வரும், 2027ம் ஆண்டு, நகர உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. அதுவரை, பதவி முடிந்த ஊரக உள்ளாட்சி களுக்கு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

மாநகராட்சியுடன் இணையும்ஊராட்சிகள் குறைப்பு ஏன்?



திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சியுடன், கணியாம்பூண்டி மற்றும் நாச்சிபாளையம் ஊராட்சிகள் இணைகின்றன. காங்கயம் ஒன்றியத்தில் உள்ள நத்தக்காடையூர் ஊராட்சியானது, பேரூராட்சியாக தரம் உயர்தப்பட்டுள்ளது.

நகர உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடியும் முன், வார்டு வரையறை பணிகளை முடித்து, அடுத்த தேர்தலின் போது, புதிய மாற்றம் நடைமுறைக்கு வரும்.

அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது; தற்போதுள்ள வார்டுகள் அடிப்படையில், அப்படியே நகராட்சியாக இயங்க துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, கட்டட உரிமம், மனை அங்கீகார உரிமம், சொத்துவரி என, அனைத்து இனங்களையும் உயர்த்தியுள்ளது. சாதாரணமாக, 2.75சென்ட் மனைக்கு, அங்கீகாரம் பெற,ஊராட்சியில், 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்; மாநகராட்சியாக இருந்தால், 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

கடந்த, 2011ல் இணைக்கப்பட்ட எட்டு ஊராட்சிகளில், மாநகராட்சி என்று கூறும் அளவுக்கு, அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மாறாக, சொத்துவரி, குப்பை வரி உயர்வு மட்டும், அனைவரது தலையிலும் இடியாக இறங்கியுள்ளது.

'வரிச்சுமையும், கட்டணங்களும் உயரும்; வசதிகள் உடனடியாக உயராது' என்ற காரணத்தால் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்க்கின்றனர். நுாறு நாள் திட்ட பயனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற ஒரு காரணமும் இருக்கிறது. இதன்காரணமாகவே, திருப்பூர் மாநகராட்சியுடன் 12 ஊராட்சிகள் இணையும் என்ற உத்தேச பட்டியல், 2 ஊராட்சியாக சுருங்கியுள்ளது. இது, அடுத்த தேர்தலுக்கு முன், மாற்றத்துக்கு உட்படவும் வாய்ப்புள்ளது.

நிதி ஒதுக்கீடு பாரபட்சம்'அரசியல்' படுத்திய பாடு



ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது இயங்கியுள்ளன. இதில், ஊராட்சி அளவில் கூட அதிக அளவு 'அரசியல்' பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வசம் இருந்த ஒன்றியங்களில், கவுன்சிலர்கள் இடையே பாரபட்சம் காண்பிக்கவில்லை. அனைத்து வார்டுகளுக்கும் பணி நடந்தது. மற்றபடி, நெடுஞ்சாலைத்துறை பணி, மத்திய, மாநில அரசு திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில், கட்சி பாரபட்சம் பார்க்கப்பட்டது; இதன்காரணமாக, ரோடு பணி ஒதுக்கீட்டிலும் அதிகாரமே வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, அமைச்சர்கள் விரும்பியபடியே, நெடுஞ்சாலை ரோடு பணி ஒதுக்கீடு நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், மடத்துக்குளம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை, ஊத்துக்குளி ஒன்றியங்கள் தி.மு.க., வசம் இருந்தன; அவிநாசி, குடிமங்கலம், திருப்பூர், வெள்ளகோவில் ஒன்றியங்கள் அ.தி.மு.க., வசம் இருந்தன; காங்கயம், குண்டடம் ஒன்றியங்கள் சுயே.,கள் வென்றனர்; பிறகு கட்சி களில் இணைந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, எதிர்க்கட்சிகள் வசம் இருந்த ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால் குடிநீர் வினியோகம், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் எது அவசியமான அத்தியாவசியமான தேவையோ அவை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதால், இது உடனடியாக சாத்தியமாகுமா என்ற ஏக்கம், மக் களிடம் ஏற்பட்டுள்ளது.




- நமது நிருபர்கள் குழு-

Advertisement