புதிய போலீஸ் கமிஷனர் இன்று பொறுப்பேற்பு

திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்கிறார்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த லட்சுமி கடந்த மாதம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்கிறார்.

கமிஷனராக இருந்த லட்சுமி, தனது ஆறு மாத பணிக்காலத்தில் மாநகர பகுதியில் சட்டவிரோத செயல்களுக்கு கிடுக்கிப்பிடி, பணியில் ஒழுங்கீனமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை, குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் 'டெடிகேட்டடு பீட்','ஆபரேஷன் ஜீரோ கிரைம்' திட்டங்கள்,போக்குவரத்து மாற்றங்கள் என இவரது அதிரடிப்பணிகள், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

திருப்பூருக்கு வர உள்ள புதிய அதிகாரியும், தவறு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்; முந்தைய கமிஷனரை போலவே போலீசார், பொதுமக்களுக்கு தேவையான விஷயங்களை ஆலோசித்து அதிரடி காட்டக்கூடியவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால், அமல்படுத்தப்பட்ட திட்டங்களைதொடர்வதோடு, மாநகருக்கு இன்னும் தேவையான பல நல்ல விஷயங்களை கண்டறிந்துஅமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Advertisement