தீர்வு காண முடியாத திடக்கழிவு பிரச்னை

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு, 17 வார்டுகளை உள்ளடக்கி செயல்படுகிறது. கடந்த 2019ல் அமைந்த மாவட்ட ஊராட்சி குழுவில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 14 பேர்; தி.மு.க., மற்றும் இதர கட்சியினர்4 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பதவிக்காலம், நேற்றுடன் நிறைவடைந்தது.

மாவட்ட ஊராட்சி குழுவின் செயல்பாடுகள் குறித்து, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் (அ.தி.மு.க.,) கூறியதாவது:

கடந்த 2019ல், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைந்த திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு, மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, கடந்த 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள், நிதி ஒதுக்கீடு இல்லாததால், ஊராட்சி பகுதிகளில் எவ்வித பணியும் மேற்கொள்ளமுடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாவட்டம் முழுவதும், ஊராட்சிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர் சத்தியபாமா, பாரபட்சமின்றி செயல்பட்டு, பணிகளை திறம்பட மேற்கொள்ள கைகொடுத்தார்.

குப்பையை இன்சினரேட்டர் மூலம், புகையின்றி எரியூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தினால், ஊராட்சிகளில் திடக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணமுடியும். நிதி இல்லாததால், சில பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு கவுன்சிலர்களும், பல்வேறு பணிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளனர். அவை அனைத்துக்கும் அதிகாரிகள், விரைந்து நிர்வாக ஒப்புதல் வழங்கவேண்டும்.

Advertisement