உழவர் சந்தை விவசாயிகளுக்கு மிரட்டல்: போலீசில் புகார்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயிகளையும், அலுவலர்களையும் மிரட்டும் வியாபாரிகள் மீது போலீசில் நிர்வாக அலுவலர் சமுத்திரபாண்டி புகார் கொடுத்துள்ளார்.

அதில், சந்தைக்கு விவசாயிகள் நேரிடையாக காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர். இதனால் சந்தை திடலுக்குள் காய்கறி மொத்த விற்பனை கடை நடத்தும் கோடாங்கி ராஜாமணி, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக காய்கறி கடை நடத்தும் வாசிமலை விவசாயிகளை சந்தைக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தி நோட்டமிட்டு விவசாயிகளை சத்தம் போடுகின்றனர். இதுகுறித்து கேட்ட என்னையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement