போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

வானூர் : கிளியனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வானுார் அடுத்த கிளியனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், துாய்மை பாரதம் 2.0, நமது சுத்தம் நமது கிராமம் என்ற தலைப்பில் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

விழாவின்போது, அனைவரும் துாய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற, மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணை பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கிளியனுார் ஊராட்சி மன்றத் தலைவர் நாகம்மாள் வேலு, துணைத் தலைவர் தெய்வ ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியர் அப்தாபேகம், ஆசிரியர் லட்சுமி ரேகா, மாவட்ட முதன்மை பயிற்சியாளர் வள்ளி, வட்டார வள அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement