சாரதானந்த பாரதி சுவாமிகள் குருபூஜை

கடலுார்; கடலுார் அடுத்த கங்கணாங்குப்பத்தில் உள்ள சாரதானந்த பாரதி சுவாமிகளின் 19ம் ஆண்டு குருபூஜை நடந்தது.

கடலுாரில் அவதரித்து, கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடம் மடத்தில் சன்னியாசம் பெற்றவர் சாரதானந்த சுவாமிகள்.

2005ம் ஆண்டு சித்தி அடைந்த சுவாமிகளின் அதிர்ஷ்டானம், கடலுார் கங்கணாங்குப்பத்தில் பெண்ணையாற்றங்கரையில் உள்ளது. அங்கு நேற்று 19ம் ஆண்டு குருபூஜை வேத ஆகம முறைப்படி நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், கடலுார் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement