'சார்' அரசியல்வாதியாக இருப்பார் இசையமைப்பாளர் தீனா ஊகம்

9

சென்னை : ''அந்த சார் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும்,'' என, இசை அமைப்பாளர் தீனா சொல்கிறார்.

'திருடா திருடி' உள்ளிட்ட பல படங்களுக்கு, இசை அமைத்தவர் தீனா. தமிழக பா.ஜ.,வில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார்.

சென்னை மதுரவாயலில், கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் அளித்த பேட்டி:

தி.மு.க.,வின் மூதாதையரான அண்ணாதுரை பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலகி இருக்க வேண்டும்.

அவர் எதுவும் கருத்து தெரிவிக்காதது, அதை விட வெட்கக் கேடானது. அரசு நடத்தும் ஒரு பல்கலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும், இந்த ஆட்சி தேவையா?

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள, 'சார்' யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சார் ஒரு அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தான் புதிராக உள்ளது.

தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும், நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. பொங்கலுக்கு, 1,000 ரூபாய் இல்லை என, அரசு அறிவித்துள்ளது.

இதனால், ஏழை மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவர் என்பது, அவர்களுக்கு தெரியவில்லை. வரும் 2026ல், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement