போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்படும்: எஸ்.பி., ஜெயக்குமார்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்படும் என, புதிய எஸ்.பி., ஜெயக்குமார் கூறினார்.

கடலுார் எஸ்.பி., யாக பணியாற்றிய ராஜாராம், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவாரூரில் பணியாற்றி வந்த ஜெயக்குமார் கடலுாருக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாவட்டத்தில் சி.சி.டி.வி., இல்லாத முக்கிய இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் புகாரினை அலுவலகத்தில் வந்து அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் சந்தித்து கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் உடனிருந்தார்.

Advertisement