வீட்டில் மர்ம தீ விபத்து; ரூ. 3 லட்சம் பொருட்கள் சேதம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் மர்மமான முறையில் வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

நெல்லிக்குப்பம் முஸ்லிம் மேட்டு தெருவை சேர்ந்தவர் விநாயகம். வீட்டிலேயே பங்க் கடை நடத்தி வந்தார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இவரது வீடு திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து விநாயகத்தை எழுப்பியுவுடன் அவர்கள் வீட்டில் இருந்து அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர்.

தகவலறிந்த கவுன்சிலர் இக்பால் மற்றும் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், பைக் மற்றும் பக்கத்தில் உள்ள அருண்பிரசாத் வீட்டின் கதவு, ஜன்னல்கள் எரிந்து சேதமானது. விபத்தில் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

தீவிபத்திற்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement