திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலுார்; தமிழக அரசின் முன்மாதிரி விருதை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில், திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது, திருநங்கையர் தினமான ஏப்., 15ம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இவ்விருதுகள் பெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அதனடிப்படையில் திருநங்கைகள் சேவை ஆற்றியதற்கான அறிக்கையுடன் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் பிப்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலுார். என்ற முகவரியிலும் வரும் பிப்., 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.