சிங்கிரிகுடி கோவிலுக்கு நாளை பாத யாத்திரை
கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு, நாளை 5ம் தேதி பாதயாத்திரை மற்றும் சிறப்பு தரிசனம் நடக்கிறது.
கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டம், சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு நாளை 5ம் தேதி பக்தர்களின் பாதயாத்திரை நிகழ்ச்சி நடக்கிறது. அதனையொட்டி, கோவிலில் அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு தரிசனம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement