குடும்ப தகராறில் கணவர் தற்கொலை

நடுவீரப்பட்டு; பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்,45; பாய்லர்களை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனால் மகாலட்சுமி கடலுாரில் தமது மகனுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பிரபாகரன் நேற்று துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement