டோல்கேட் முற்றுகை: விவசாயிகள் போராட்டம்
கண்டமங்கலம்; கெங்கராம்பாளையம் டோல்கேட் நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலையில் அமைத்துள் கெங்ராம்பாளையம் டோல்கேட் நேற்று (3ம் தேதி) திறக்கப்பட உள்ளதாக நகாய் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழக-புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பினர் இணைந்து கெங்கராம்பாளையம் டோல்கேட்டை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்-புதுச்சேரி செல்வதற்கு தனியாக சர்வீஸ் சாலை அமைத்துத்தர வேண்டும்.
விழுப்புரத்தில் தொடங்கி எம்.என் குப்பம் வரை பல்வேறு இடங்களில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், சர்வீஸ் சாலை பணிகள் நிறைவடையவில்லை.பணிகள் 100 சதவீதம் முடிந்த பின்னரே டோல்கேட்டை திறக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாய சங்க தலைவர் கலியவரதன், விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டோல்கேட் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.