பிரயாக்ராஜ் மகா கும்பமேளா: கோவை, திருப்பூர் வழியே ரயில் 

திருப்பூர்: உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி, வரும், 13ம் தேதி துவங்கி, பிப்., 26 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து பிரயாக்ராஜை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அவ்வகையில், தெற்கு ரயில்வே, மங்களூரு - வாரணாசி இடையே சிறப்பு ரயில் - எண்:06019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ரயில், வரும், 18 மற்றும் பிப்., 15 ஆகிய தேதிகளில் இயங்கும்.

அதிகாலை, 4:15 மணிக்கு மங்களூருவில் புறப்படும் ரயில், மதியம், 1:10 மணிக்கு கோவைக்கும், 1:55 மணிக்கு திருப்பூருக்கும் வரும். ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஸ்டேஷன்களில் நின்று மூன்றாவது நாளான திங்கட்கிழமை மதியம், 2:50 மணிக்கு வாரணாசி சென்று சேரும்.

மறுமார்க்கமாக, வரும், 21ம் தேதி மற்றும் பிப்., 18ம் தேதி செவ்வாய் மாலை 6:20 மணிக்கு வாரணாசியில் புறப்படும் ரயில் வெள்ளி அதிகாலை, 2:30 மணிக்கு மங்களூரு சென்றடையும். நான்கு ஏ.சி., - 12 முன்பதிவு பெட்டி, இரு பொது பெட்டிகளை கொண்டதாக சிறப்பு ரயில் இருக்கும். முன்பதிவு துவங்கியுள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement