நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை தடுத்த போலீஸ்
சேலம்: நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற எம்.எல்.ஏ.,வை, போலீசார் தடுத்தனர்.
சேலம், மாமாங்கம், 1வது, 2 வது அண்ணா நகர், கிளாக்காடு உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே, இணைப்பு பாலம் வேண்டி, ஓராண்டாக கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக கூறி, அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால், குரங்குச்சாவடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நேற்று நடந்தது. பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமையில் மக்கள், குரங்குச்சாவடியில் இருந்து நடந்து, அலுவலகத்துக்கு சென்றனர்.
சூரமங்கலம் போலீசார், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தினர். அப்போது, நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சீனிவாசலு, 'ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்-படும்' என தெரிவித்ததால், பூட்டு போடும் போராட்டத்தை தற்-காலிகமாக
கைவிட்டனர்.
'டிரண்டிங்' மாற்றிய எம்.எல்.ஏ.,
இதுகுறித்து, எம்.எல்.ஏ., அருள் கூறுகையில், ''இது
குறித்து, 4 முறை கடிதம் வழங்கியுள்ளேன். நடவடிக்கை இல்லை. தற்போது உத்தரவாதம் அளித்துள்ளார்கள். இணைப்பு பாலம் ஏற்படுத்தி தராவிட்டால் அடுத்த மாதம், அம்மா சத்திய-மாக, மக்களை ஒன்று திரட்டி சாலையில் படுத்து ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபடுவேன்,'' என்றார்.
இதன்மூலம் காலில் விழுவதை கைவிட்டு, 'டிரண்டிங்'கை மாற்றி, 'அம்மா சத்தியம்' என, எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். பசுமை தாயக தலைவர் சத்ரிய சேகர், மகளிர் அணி கிருஷ்-ணாம்பாள் உள்பட பலர் பங்கேற்றனர்.