தனியார் நிறுவன பெண் ஊழியர் படுகொலை தகாத உறவில் தகராறா; வாலிபரிடம் விசாரணை

1


ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஓலா நிறுவன பெண் ஊழியர் படு-கொலை செய்யப்பட்டார். இது குறித்து வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரை சேர்ந்தவர் தீபா, 32. இவருக்கும் தர்மபுரி மாவட்டம், கம்பைநல்-லூரை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும், 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, 12, 10 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், தீபா கணவரிடம் கோபித்து கொண்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தன் தாய் வீடான கஞ்ச-னூருக்கு வந்துள்ளார்.


உடல்நலக் குறைவால் கடந்தாண்டு தீபாவின் கணவர் மாதேஷ் இறந்துள்ளார். இந்நிலையில், தீபா-வுக்கு கல்லாவி அடுத்த பள்ள சூளகரையை சேர்ந்த கவுதம், 22, என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


தாய் வீட்டில் இருந்த தீபா கடந்த டிச.,8ல் போச்சம்பள்ளியில் இயங்கி வரும் ஓலா கம்பெனி கேண்டீனில் வேலைக்கு சேர்ந்-துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து டி.வி.எஸ்., மொபட்டில் வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக கவுதமிற்கு, தீபா போனில் கூறி-யுள்ளார். 'நீ வீடு செல்லும் வரை பின்னால் வருகிறேன். டூவீ-லரை நிறுத்தாமல் போ' என கவுதமும் கூறியுள்ளார். இது குறித்து போலீசாருக்கும் தகவல்
அளித்துள்ளார்.


இந்நிலையில், இரவு, 9:50 மணியளவில் கஞ்சனூர் முருகன் கோவில் அருகே சென்ற தீபாவை மர்மநபர் கத்தியால் குத்தி-விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் தீபா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த கல்லாவி போலீசார் சடலத்தை மீட்-டனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பார்வை-யிட்டு ஆய்வு செய்தார் கவுதமிடம் விசாரித்த பின் போலீசார் கூறி-யதாவது:
தீபாவுக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே கம்பை-நல்லூர், சமத்துவபுரத்தை சேர்ந்த மிதுன், 30, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபா அவரது கணவர் மாதே-சுக்குள் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் தீபா-விற்கு, கவுதம் என்பவருடன் பழக்கம்
ஏற்பட்டுள்ளது.
இதனால் மிதுனுடன் பேசுவதை தீபா தவிர்த்துள்ளார். தீபா-விடம் பேசுவதற்காகவே, கடந்த சில தினங்களாக புது எண் மூலம் அவரை மிதுன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த எண்ணின் மொபைல் டவர் மூலம் ஆய்வு செய்ததில், தீபாவை, மிதுன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

Advertisement