அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கடலுார் : கடலுாரில் நடந்த அண்ணா விரைவு சைக்கிள் போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா விரைவு சைக்கிள் போட்டி, கடலுார் சாவடி அக்ஷரா வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் துவங்கியது. 13, 15, 17வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் அனு, அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டுஅலுவலர் மகேஷ்குமார் மற்றும் விளையாட்டு பயிற்றுனர்கள், நகர பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5ஆயிரம், இரண்டாம் பரிசாக 3ஆயிரம், மூன்றாம் பரிசாக 2ஆயிரம் மற்றும் 4 முதல் 10வது வரை ஆறுதல் பரிசாக ரூ.250 என வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.