போலீஸ் ஸ்டேஷன் முன் மக்களுக்காக காத்திருப்பு கூடம்

திருவாடானை: தமிழகத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார், விசாரணை தொடர்பாக வரும் பொது மக்களுக்கு அதன் வளாகத்தில் கழிப்பறை வசதியுடன் கூடிய காத்திருப்புக் கூடம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: காத்திருப்பு கூடம் அமைக்க தமிழகம் முழுவதும் 250 போலீஸ் ஸ்டேஷன்கள் முதற் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷன்வளாகத்திலும் ரூ.4 லட்சத்தில் கழிப்பறை வசதியுடன் காத்திருப்புக் கூடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் முன்பு அதற்கான கட்டட பணிகள் நடக்கிறது என்றனர்.

Advertisement