மின்வாரியத்தில் ஒயர்மேன் பற்றாக்குறை: பணிகள் தொய்வு

திருவாடானை: திருவாடானை மின் வாரியத்தில் ஒயர்மேன்கள் இல்லாததால், மின்தடை ஏற்படும் போது சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை துணை மின்நிலையத்தில் ஒயர்மேன்கள் நிரந்தர ஒயர்மேன்கள் இல்லாததால், உதவியாளர்களாக நியமிக்கபட்டவர்கள், அப்பணியை செய்கின்றனர். கண்மாய், குளங்கள், ஆறுகள் வழியாக செல்லும் மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் டிரான்ஸ்பாமரில் டிரிப் ஆகி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்களை வெட்ட மின்வாரியத்தில் ஆட்கள் கிடையாது.

கிராமங்களில் ஒயர்மேன்கள் இல்லாததால் வீடுகளில் மின்தடை ஏற்படும் போது சரி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே நிரந்தரமாக ஒயர்மேன்கள் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement