திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி
திருவாடானை:திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சி செங்கமடை, அழகமடை ஊர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது குறித்து செங்கமடை சுந்தரபாண்டி கூறியதாவது: குடிநீர் வராததால் தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம்.
வசதியுள்ளவர்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவேஉடனடியாக குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement