அதிகாரிகள் போல் வேடமிட்டு கொள்ளை அடித்த ஆசாமிகள்

1

தட்சிண கன்னடா : அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து, 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

தட்சிண கன்னடா, பண்ட்வால் தாலுகா, போலந்தூரரை சேர்ந்தவர் கலைமான் ஹாஜி. இவர், பீடி வியாபாரம் செய்து வருகிறார். செல்வந்தரான இவர், அந்த பகுதியில் நன்கு அறியப்படும் ஒருவராக உள்ளார்.

இவரது வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை, நான்கு பேர் காரில் வந்துள்ளனர்.

தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்றும், தமிழகத்தில் இருந்து வந்துள்ளோம் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

வீட்டை ஒரு நாள் முழுதும் சோதனையிட உள்ளோம் என கூறி உள்ளனர். அவரும் இதை நம்பி, ஒரு நாள் முழுதும் சோதனை செய்வதற்கு சம்மதித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் அசந்த நேரம் பார்த்து, அந்த கும்பல் வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது.

இது பற்றி கலைமான், விட்லா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

விசாரணையில், அமலாகத்துறை அதிகாரிகள் யாரும் சோதனை செய்யவில்லை என்பது தெரிந்தது. அதிகாரி வேடத்தில் வந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement