சுதந்திர போராட்ட வீரர்கள் குறும்படம் தயாரிக்க அழைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் சுதந்திர போராட்ட வீரர்கள், ஆக சிறந்த தமிழ் அறிஞர்கள் பற்றி குறும்பட தயாரிக்க கலை பண்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு துறை சிறந்த குறும்படங்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தாண்டு உதவித் தொகை வழங்க தகுதியான தயாரிப்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரியின் சுதந்திர போராட்ட வீரர்கள், ஆக சிறந்த தமிழ் அறிஞர்கள், புதுச்சேரி வரலாறு அடிப்படையில் குறும்படங்கள் இருக்க வேண்டும். அதற்கான விவரங்கள், கலை பண்பாட்டுத் துறையின் www.art.py.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவணங்களுடன் வரும் 17 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

Advertisement