குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி 20ம் தேதி துவங்குகிறது

புதுச்சேரி: குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி வரும் 20ம் தேதி புதுச்சேரியில் துவங்குகிறது.

இது குறித்து கலைப்பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறையானது சிறுவர்கள், நுாலக வாசகர்களுக்கான பல்வேறு காலக்கட்டங்களில் புத்தக கண்காட்சியை நடத்தி வந்தது. அதே போன்று இந்தாண்டு குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் கண்காட்சி-2025 வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடத்த உள்ளது.

இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளூர் மற்றும் வெளியூர் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள், விளையாட்டு பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் கழிவு அளிக்க வேண்டும்.

புத்தக கண்காட்சியின் விண்ணப்பங்கள் https://art.py.gov.in என்ற இணைய முகவரியில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட் விண்ணப்பங்கள் வரும் 13ம் தேதிக்குள் இயக்குநர், கலை பண்பாட்டு துறை, ரோமன் ரோலண்ட் வீதி, புதுச்சேரி-605001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement