பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் 40 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

2

லக்னோ: 'பிரயாக்ராஜில் நடக்க உள்ள கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள்' என வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


பிரயாக்ராஜில் கும்பமேளா ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள்' என வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷஷிகாந்த் திரிபாதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: யாத்ரீகர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும்.



பிளாட்பாரங்களில் குழப்பம் மற்றும் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே, 10,000 வழக்கமான ரயில்கள் மற்றும் 3,000 சிறப்பு சேவைகள் உட்பட 13,000 ரயில்களை இயக்கும். நீண்ட தூரத்திற்கு சுமார் 700 மேளா சிறப்பு ரயில்கள் உள்ளன. சுமார் 1,800 குறுகிய தூர ரயில்கள் 200 முதல் 300 கிமீ.,க்கு இயக்கப்படும். பிரயாக்ராஜில் நடக்க உள்ள கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், கும்பமேளா ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை பிரயாக்ராஜில் நடக்கிறது. பல்வேறு ஆன்மீக, கலாசார மற்றும் சுற்றுலா அம்சங்களுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் நிகழ்வை சுமூகமாக ஒழுங்கமைப்பதற்காக சோதனை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement