சாராயக்கடையில் மோதல்; வாலிபர் காயம்

பாகூர்: கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் திவான்குமார், 30. இவர், நேற்று முன்தினம் மாலை நரம்பை சாராயக் கடைக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில், திவான்குமாரை சிலர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த திவான் குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திவான் குமாரின் சகோதரி தியா 32; அளித்த புகாரின் பேரில், நரம்பை கிராமத்தை சேர்ந்த வில்வநாதன், பசுபதி ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement