சோம்பட்டு கிராமத்தில் செயல்விளக்க முகாம்
திருக்கனுார்: சோம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் செயல்முறை விளக்க முகாம் நடந்தது.
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறுதியாண்டு மாணவிகள் திருக்கனுார் பகுதியில் ஊரக வேளாண் கள அனுபவ பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சோம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க முகாம் நடந்தது.
இதில், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், ஜீரோ ஆற்றல் குளிர் அறை, பூச்சி பொறி, புதியதாக வெளியிட்ட பூ மற்றும் பயிர் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் முனைவர் பார்த்தசாரதி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement