டிரைவர் தற்கொலை

அரியாங்குப்பம்: போதைக்கு அடிமையான டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கயந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 44. டிரைவர். வேலைக்கு செல்லாமல், போதைக்கு அடிமையானார். அதனால், அவரது மனைவி, கோபித்து கொண்டு, அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

நேற்று முன் அதிகாலை சுரேஷ் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement