மரத்தில் மோதிய வேன் டிரைவருக்கு கால் முறிவு
வேடசந்துார், ; வேடசந்துார் பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் வேன் டிரைவர் ராஜேஷ் 30. இவரும் இவரது தாயார் சுமதியும் வேனில் வெங்காயம் விற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் பகுதிக்கு சென்றவர்கள் இரவு வேனில் வீடு திரும்பினர். மண்டபம் புதுார் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது.
ராஜேஷ் வலது கால் மாட்டி கொண்ட நிலையில் வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement