மின் மோட்டார் ஒயர் திருட்டு

வேடசந்துார், ; அம்மாபட்டி புதுாரை சேர்ந்தவர் பழனிச்சாமி 52. அரியப்பந்தம்பட்டி பசும்பொன் நகரில் 5 ஏக்கர் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து கவனித்து வருகிறார்.நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாருக்கு செல்லும் ஒயர்கள் வெட்டி எடுக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம்.வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர். மின் மோட்டார்களுக்கு செல்லும் ஒயர்களை குறி வைத்து சிலர் திருடி வருவதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கின்றனர்.

Advertisement