பக்தர்களுக்கு வசதி கோரி முறையீடு

திண்டுக்கல்; தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மாநில தலைவர் கர்ணன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆத்துார் என்.பஞ்சம்பட்டியில் கால்நடைகள் கிளை நிலையம், செம்பட்டி செல்லும் வழியில் செல்லும் சக்கையநாயக்கனுார் கிறிஸ்தவ சர்ச் அருகே சாலை விரிவாக்கத்திற்காக பயணிகள் நிழற்குடை, தெருவிளக்குகளை அகற்றினர். பணி முடிந்த ஓராண்டாகியும் இதுவரை அமைக்கவில்லை.

பழநி பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்கான நடைபாதை சில இடங்களில் அகற்றப்பட்டும், சில இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்தும் கிடக்கிறது.

பக்தர்கள் பாதுகாப்பின்றி மன உளைச்சல் உடன் செல்கின்றனர்.

இதோடு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement