டாக்டர்கள் எண்ணிக்கையை உயர்த்துங்க சங்க மாநில தலைவர் வேண்டுகோள்
திண்டுக்கல்,; ''நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு டாக்டர்கள்,செவிலியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்''என அரசு மருத்துவர்கள்,பட்ட மேற்படிப்பு மருத்துவ சங்க மாநில தலைவர் சுவாமிநாதன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மருத்துவ கல்லுாரியின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்த போதிலும் அதில் பணிபுரியும் டாக்டர்கள் பணியிடங்களின் எண்ணிக்கை 2 மடங்கு மட்டுமே உயர்ந்தது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு டாக்டர்கள்,செவிலியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
அப்போது தான் தரமான சிகிச்சை வழங்க முடியும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் விரிவான அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சுகாதாரத்துறை மகப்பேறுவில் நல்ல முன்னேற்றத்தை காண வேண்டுமென்றால் அனைத்து பிரசவங்களும் சீமோன் சென்டர்களில் நடக்க வேண்டும்.
இதில் முதல்வர் தலையிட வேண்டும். மறுசீராய்வு செய்து அதன் மூலம் வரக்கூடிய பதவி உயர்வு பணப்பலன்களை வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 5000க்கு மேற்பட்ட மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.