பா.ஜ., நிர்வாகிகள் தேர்தல்

சின்னாளபட்டி; ஆத்துார் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான எஸ்.கே.பழனிச்சாமி, கோவிந்தராஜ், ஆத்துார் வடக்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வினோதினி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் மனோகரன் வரவேற்றார். வாக்கெடுப்பு மூலம் ஒருமித்த கருத்தோடு ஒன்றிய தலைவராக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். பிரதிநிதியாக லட்சுமண மணிகண்டன் தேர்வாகினார். புதிதாக நிர்வாகிகளை மாவட்டத் தலைவர் தனபாலன் வாழ்த்தினார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement