ரூ.4,285 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:மூன்றாம் காலாண்டு வருவாய் மற்றும் உள்நாட்டு பங்குகளின் உயர் மதிப்பீடுகள் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் முதல் மூன்று நாட்களில், இந்திய பங்குகளில் இருந்து 4,285 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பரில் அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இம்மாதத்தின் முதல் மூன்று வர்த்தக அமர்வுகளில், 4,285 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர்.

அன்னிய முதலீட்டாளர்களின் போக்கு எச்சரிக்கையான அணுகுமுறையையே குறிக்கிறது. இவர்கள் கடந்தாண்டில் இந்திய பங்குகள் மீதான முதலீடுகளை கணிசமாக குறைத்துள்ளனர். நிகர வரவு, வெறும் 427 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement