சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
குன்னுார்; குன்னுார், 20வது வார்டு, ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள நடைபாதை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது, தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் விழுகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement