பாலக்காடு மராத்தான் போட்டி: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
பாலக்காடு; 'பாலக்காடு மராத்தான்' போட்டியில், மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு 'போர்ட் ரன்னர்ஸ் கிளப்' சார்பில் 'பாலக்காடு மராத்தான்' என்ற போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், 21 கி.மீ., 'ஹாப் மராத்தான்', 10 கி.மீ., மராத்தான் போட்டிகளும், 5 கி.மீ., 'பேமிலி பன்' மராத்தான் ஓட்டமும் நடந்தது. மலம்புழா நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சுற்றிலும் உள்ள பாதையில், இந்த மராத்தான் போட்டிகள் நடந்தன.
'ஹாப் மராத்தான்' போட்டியை கேரள தடகள சங்க துணைத்தலைவர் ஹரிதாஸூம், 10 கி.மீ., போட்டியை மலம்புழா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுஜித்தும் துவக்கி வைத்தனர்.
21 கி.மீ., 'ஹாப் மராத்தான்' போட்டியில் ஆண்கள் பிரிவில் அபிஜித் முதலிடம் பிடித்தார். விஷ்ணு, பரத் ஆகியோர் முறையை இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் ஐஸீனா கனி முதலிடம் பிடித்தார். ஷாந்தலா கிணி, மோனிஷா கேம்கா ஆகியோர் முறையை இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
10 கி.மீ., மராத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் மனோஜ் முதலிடம் பிடித்தார். ஜெரால்டு இரண்டாம் இடமும் சூரியஜித் மூன்றாம் இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் பவுர்ணமி முதலிடத்தை பிடித்தார். அனிதா இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றார். மூன்றாம் இடத்தை ராஜலக்ஷ்மி பிடித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 3,000க்கும் மேற்பட்ட ஓட்டப் பந்தய வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம், மாவட்ட கலெக்டர் சித்ரா ஆகியோர், ' பேமிலி பன்' மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.