காய்ச்சல் பாதிப்பு 3 வயது சிறுமி பலி
கொடுங்கையூர்:கொடுங்கையூர், கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சாந்தம். இவரது 3 வயது மகள் டெனிஷா. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 3ம் தேதி கொடுங்கையூர், எத்திராஜ் சுவாமி சாலையில் உள்ள கே.வி.டி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையின் கவன குறைவால் குழந்தை இறந்து விட்டதாக கூறி, குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் போலீசார், குழந்தையின் உறவினர்களிடம் சமரசம் பேசினர். பின், குழந்தையின் பெற்றோர், 'மேல்நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும், குழந்தையை பிரேத பரிசோதனை எதுவும் செய்ய வேண்டாம்' எனவும், எழுதி கொடுத்து உடலை பெற்று சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement