கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய அஜித்குமார்

துபாய்:துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது; விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். இதற்கு இடையில் அஜித், கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி ,இம்மாதம் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், 15 வருடங்கள் கழித்து ரேஸிங்கில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் அஜித்குமார்.

சமீபத்தில் தான் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய அஜித், உடனடியாக துபாய் புறப்பட்டு சென்றார்.

அங்கு, கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதில் விபத்துக்குள்ளானது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கார் விபத்தில் அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement