தமிழ் பேரவையில் இலக்கிய சந்திப்பு
புவனகிரி : புவனகிரி தமிழ்ப் பேரவையின், 138வது மாத இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி பாரதி பதின்ம மேனிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெகன் வரவேற்றார். சங்க இலக்கிய அமுதத்தில்தொடியுடைய தோள்
மணந்தனன் எனத்தொடங்கும் 239 வது புறநானுாற்று பாடல் குறித்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன், திருப்புகழ் அமுதத்தில்,ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் எனத்தொடங்கும் 1012 வது திருப்புகழ் பாடல் குறித்து பேராசிரியர் அன்பழகன் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் சுற்றுபகுதியினர் பங்கேற்றனர். துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement