வியாபாரி இறந்த சம்பவம் உடலை கைப்பற்றி விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் தரம்சந்த் நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சங்கர்,58; நடைபாதை வியாபாரி. இவர் மனைவி காஞ்சனா,45; இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, சங்கரை அவரது குடும்பத்தார் வீட்டிற்கு அழைத்து சென்றவுடன் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் அவரை, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த திண்டிவனம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திண்டிவனம் டவுன் போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement