பெண் கொலை வழக்கு; கொலையாளிக்கு குண்டாஸ்
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண், கணவனை இழந்து தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர், கடந்த 27ம் தேதி மாலை பால் ஊற்ற அருகில் கூட்டுறவு பால் சங்கத்திற்கு சென்றுவிட்டு திரும்பினார். அப்போது, நாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் குமரேசன்,32, என்பவர், வழிமறித்து தாக்கி அருகில் உள்ள வயலுக்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த 2ம் தேதி குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரசாந்த், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் சிறையில் உள்ள குமரேசனிடம் அதற்கான உத்தரவை வழங்கினர்.