செம்பொற்சோதிநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில், கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. நான்கு காலங்களாக பிரித்து பூஜைகள் செய்தனர். முதல் நாள் பூஜையாக 3ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, முளைப்பாரி எடுத்தல், யாக வேள்வி துவக்க நடந்தது.

தொடர்ந்து 2வது நாளாக யாகசாலை பூஜை, விமான கலசம் நிறுவுதல் நடந்தது. 3வது நாளாக திருமுறை விண்ணப்பம் செய்து 3-ம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்றது.தொடர்ந்து நேற்று நான்காம் யாக பூஜைகள் நடத்தி, காலை 8:30 மணிக்கு விமானங்கள், மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

விழாவை திருநாவுக்கரசர் திருமடம், திருநாவுக்கரசு நாயனார் உழவாரத்திருக்கூட்டம் உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடக்கிறது.

Advertisement