குட்கா விற்பனை இருவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு பேரை போலீ சார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த அழகுராஜன் மகன் முத்துக்கனி, 56; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் முத்துக்கனியை கைது செய்து விசாரித்தனர்.

அதில், விளாந்தாங்கல் ரோடு பகுதியில் உள்ள கிருஷ்ணன் மகன் பரணி, 37; என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கியதாக முத்துக்கனி தெரிவித்தார். இதையடுத்து, பரணியையும் போலீசார் கைது செய்தனர். மொத்தமாக ரூ.2,850 மதிப்புள்ள ஹான்ஸ், விமல் மற்றும் வி1 டுபாக்கோ உள்ளிட்ட குட்கா பொருட்கள், டி.வி.எஸ்., மொபட் மற்றும் சுசுகி ஸ்கூட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement