கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரத்தில் கிணற்றில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிவர் சையத் மகன் அலி முனிவர் சையத் 21, இவர் வேலுாரில் வசித்து வருகிறார்.நேற்று மல்லாபுரத்தில் துக்க நிகழ்வுக்காக வந்தவர் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார்.

தகவல் அறிந்த வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த அலிமுனிவர்சையத் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து வடப்பொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement